அதிகாரிகளின் துணையுடன் பரிசுப்பொருட்களை அள்ளி வீசும் தி.மு.க.! கண்டுக்கொள்ளுமா தேர்தல் ஆணையம்!

Update: 2022-02-15 11:23 GMT

பரமக்குடி நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் பரிசுப்பொருட்களை அதிகாரிகளின் துணையுடன் திமுகவினர் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆளும் கட்சியான திமுக பல்வேறு பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு அதிகாரிகளின் பாதுகாப்போடு வழங்கி வருகிறது. இது பற்றிய புகார்களை அதிமுக, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

Full View

அதிகமான பரிசுப்பொருட்கள் கோவை மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட லாரிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷ்னரிடமும் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஏற்பாட்டில் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலான குழுவினர், வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அதிலும் பெண்களுக்கு சில்வர் குடத்தை வழங்கி வருகின்றனர். இது பற்றிய புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆளும் கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News