நாட்டின் பல்வேறு இடங்களில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து வெடிக்கும் ஏ.பி.வி.பி போராட்டம்
மதமாற்ற கொடுமையால் இறந்த சிறுமி லாவண்யா விவகாரத்திற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு வெளியே போராடிய ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.
தஞ்சையில் மதமாற்ற கொடுமை காரணமாக கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டு இறந்தார், இந்த விவகாரத்தை தி.மு.க அரசு மூடி மறைக்கப் பார்க்கும் வேளையில் தமிழக பா.ஜ.க அண்ணாமலை தலைமையில் கையிலெடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக இறந்த சிறுமியின் வழக்கு சி.பி.ஐ'க்கு மாற்றக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது, இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு மிஷனரிகளுக்கு ஆதரவாக இந்த வழக்கை சி.பி.ஐ'க்கு மாற்ற விடாமல் நீதிமன்றத்தில் தடை ஏற்படுத்த முயன்றது.
இந்நிலையில் இந்த வழக்கில் இதுவரை வாய் திறக்காத தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் ஸ்டாலின் வீட்டின் அருகே போராட்டம் நடத்தினர் அப்பொழுது ஏ.பி.வி.பி தேசிய தலைவர் நிதி திரிபாதி, தேசிய தலைவர் முத்துராமலிங்கம், தென்மாகாண மாநில பிரிவு செயலாளர் சுஷில் மற்றும் அவருடன் 30'க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர், அப்போது தி.மு.க அரசு தன் வசமுள்ள காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு அவர்களை அடித்து அப்புறப்படுத்தியது மேலும் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மௌனத்தை கலைக்கும் விதத்திலும் சிறுமியின் இழப்புக்கு நீதி கேட்டுப் போராடிய ஏ.பி.வி.பி மாணவர்களை விடுவிக்கக் கோரியும் நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது குறிப்பாக போபால், பெங்களூர், மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, அகர்தலா, ராஞ்சி, ஜலந்தர், ஜம்மு, சிம்லா மற்றும் பாட்னா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.