கோவையில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் நிலையை தி.மு.க ஏற்படுத்தப்போகிறது - சீறும் வானதி சீனிவாசன்

Update: 2022-02-17 13:00 GMT

"சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசிடம் பேசி முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வேண்டும்" என வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை மாநகராட்சி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி தண்ணீர். தமிழ்நாடு, கேரளா ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 1.30 டிஎம்சி தண்ணீர் அணையிலிருந்து நம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 0.48 முதல் 1.15 தண்ணீரைத்தான் கேரளா கொடுக்கிறது, மேலும் சிறுவாணியின் முழு கொள்ளளவு 50 அடி ஆனால் 45 அடிக்குமேல் உயரத்தை ஏற்றக் கூடாது என கேரள அரசு முடிவெடுத்துள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நான்காவது ஷெட்டரை கேரள அரசு மூடி வைத்துள்ளது. இதனால் கோவை மாநகருக்கு வழக்கத்தை விடவும் மிக குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது, கோடை காலம் நெருங்கும் வேளையில் இதே நிலை நீடித்தால் கோவை மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது இந்த அபாய சூழலில் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறும்பொழுது, "சிறுவாணி அணை முழுவதும் நிரம்பி இருந்தால்தான் கோவை மக்களுக்கு சிக்கலின்றி குடிநீர் வழங்க முடியும், இப்பொழுது இருக்கும் நீரின் அளவு மார்ச்சு மாதம் வரை கூட தாங்காது கேரள அரசிடம் பேசி இந்த சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் இதை விடுத்து அதிகார பலத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க முயல்கின்றனர் தி.மு.க'வினர்" என்றார்.


"தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தி.மு.க'வினர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் குறியாக உள்ளனர். கடந்த தேர்தலில் கோவையில் ஓர் இடத்தில் கூட தி.மு.க வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் மக்கள் தி.மு.க'விற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.


Source - Junior Vikatan

Similar News