"பா.ஜ.க காலூன்ற போகுதே?" பொறாமையில் வெதும்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

Update: 2022-02-21 11:30 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று அனைத்து நாளிதழ்களிலும் பா.ஜ.க முழு பக்கம் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியாக இருப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் பா.ஜ.க முழுப்பக்க விளம்பரம் கொடுத்து தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார், மேலும் பா.ஜ.க என்னதான் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டாலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்று அவர்களின் பலம் தெரியவரும்' எனவும் தெரிவித்தார் மாணிக்கம் தாகூர் எம்.பி.


'மத்திய அரசின் அதிகாரத்தை நம்பி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்ட தாகவும் தமிழக அரசியலில் முக்கிய இடத்தைப்பெற துடித்துவருவதாகவும்' அவர் குறிப்பிட்டார்.


கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போது கூட்டணி அமைக்காமல் தனியாக பா.ஜ.க களம் கண்டது தமிழ் மக்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்றதும், நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளில் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை பா.ஜ.க கண்டிப்பாக பிடிக்கும் என்பதையும் கருத்துக்கணிப்புகள் கூறிவந்தன. இந்நிலையில் வளர்ச்சியில்லாமல் அதலபாதாளத்தில் செல்லும் காங்கிரசுக்கு இதனை பார்த்து பொறுக்க முடியவில்லையோ என தோன்றுகிறது.



Source - One India Tamil

Similar News