"எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் தஞ்சம் தர தயார்" உக்ரைன் மக்களுக்கு மால்டோவா அதிபர் உதவிக்கரம்

Update: 2022-02-24 13:15 GMT

"உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தஞ்சம் தர தயார்" என மால்டோவா நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் ரஷ்ய கூட்டமைப்பு ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்காக ரஷ்யா சிறிய வகை பீரங்கிகள் கனரக மற்றும் சிறிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது, ரஷ்யாவின் கிரீமியா சுயாட்சி பகுதியிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர். கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு உள்ளிட்ட வகை வெடிகுண்டுகள் பேசப்படுவதால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர் மேலும் பலர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.


இந்நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். "ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார்" என மால்டோவா அதிபர் அறிவித்துள்ளார். மேலும் 'உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார்' எனவும் கூறியுள்ளார்.


அதிபரின் இந்த அறிவிப்பால் உக்ரைன் எல்லையோர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


Source - Daily Thanthi

Similar News