பெண்ணியம் பேசிக்கொண்டே பாலியல் சுரண்டலில் கருஞ்சட்டையினர் - பிரான்சிஸ் தமிழச்சி'யின் வாக்குமூலம்
பெரியாரிஸ்ட் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட யூமா ஜஹாரோ என்ற பெண் 'பெரியார்' என்னும் பெயரைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய பாலியல் சுரண்டல் நடந்துள்ளதாக வெடிகுண்டு குற்றச்சாட்டை வீசியுள்ளார் பெரியாரிய கும்பல் மீது.
பிரான்சில் இருந்து வந்த தமிழச்சி எனப்படும் பெண் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார், அப்போது, "அவர் பெரியார் மற்றும் திராவிட இயக்க குழுக்களால் பெரும்பாலான பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்த பெண்களை ஒருங்கிணைப்பது லூலூ என்கின்ற பெண் குழு" என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
தமிழச்சி கூறியபடி, "பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழ்கின்றனர். அவர்களிடம், "நீங்கள் உறவில் திருப்தியாக இருக்கிறீர்களா? உங்கள் கணவருடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது? என்பது போன்ற பாலியல் உணர்வை தூண்டும் கேள்விகளைக் கேட்டு அவர்களிடம் உங்கள் உறவில் திருப்தியாக இல்லை என்றால் அதற்கு நீங்கள் வெளியில் தேடிக் கொள்ளலாம்! என்ற ரீதியில் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் பெரியார் கும்பலால் சீரழிக்கப்படுகிறார்கள்" என்ற உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் இந்தக் கும்பலில் சுந்தரவல்லி, கொளத்தூர் மணி, பெரியார் சரவணன், ஆகிய திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் பெயர்கள் அதிகமாக இடம்பறுகின்றது.
லூலூ கும்பல் என்றால் தேவா ஜம்லா என்ற கன்னியாகுமரியை சேர்ந்த பெண் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார் அவர் 2017'ம் ஆண்டு பேஸ்புக்கில் 180 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை துவங்கினார், அவர் அதற்கு முன் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு எழுத்தாளராக தன்னை காட்டிக் கொண்டு பெண்களை ஒருங்கிணைக்க தொடங்கிய லூலூ நாளடைவில் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு தள்ளும் வேலையைச் செய்து வந்ததாக தெரிவிக்கிறார் பிரான்ஸ் தமிழச்சி.