விவசாய போராட்டம் தீவிரமாக நடந்த மேற்கு உத்தரப் பிரதேசத்தை தட்டி தூக்கிய பா.ஜ.க

Update: 2022-03-10 10:15 GMT

உத்தபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்ற இடங்களில் மீண்டும் பா.ஜ.க'வே அதிகப்படியான இடங்களை கைப்பற்றியுள்ளது.


உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது, அங்குள்ள மொத்தம் 403 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது, அதில் 250 க்கும் மேலான இடங்களை கைப்பற்றி மீண்டும் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றுகிறது.


இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சுமார் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் ஆளும் பா.ஜ.க'வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிக அளவில் விவசாயிகள் போராட்டத்திலு பங்கேற்றனர், இந்த போராட்டத்தினால் பா.ஜ.க'விற்கு பின்னடைவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பா.ஜ.க'விற்கு எதிராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் நடந்த மேற்கு உத்தரப் பிரதேசத்தில் முதல் இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்ட நிலையில் முதல் கட்டத்தில் 62.54% வாக்குகளும் இரண்டாம் கட்டத்தில் 64.66% வாக்குகளும் பதிவாகி இருந்தன.


இந்நிலையில் இங்கு பா.ஜ.க மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் என எதிர்கட்சிகள் கூறி வந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள 136 இடங்களில் 37 தொகுதியை மட்டுமே சமாஜ்வாடியால் பெற முடிந்தது, 93 இடங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. இங்கு ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, இங்கிருந்துதான் டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு கூட விவசாயிகள் சென்று கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Source - OneIndia.com

Similar News