காங்கிரஸ் கோட்டையான அமேதி, ரேபரேலி இரண்டும் பறிபோயின - பிரியங்கா காந்தியின் பிரச்சார ராசி

Update: 2022-03-10 10:30 GMT

பிரியங்கா காந்தி முழு நேர அரசியலில் முதன்முறையாக ஈடுபட்டதன் விளைவாக காங்கிரஸின் கோட்டைகளை அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு பகுதிகளும் காங்கிரஸின் கையை விட்டு சென்றுள்ளது.


காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இதுவரையில் முழுநேர பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தில் அவர் முழுநேரமாக இறங்கி காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார் குறிப்பாக காங்கிரஸ் கோட்டையான அமைதி மற்றும் ரேபரேலியில் இருந்து அவர் அதிக அளவில் பிரச்சாரம் செய்தார்.


காங்கிரஸ் பல ஆண்டுகளாக உத்தரபிரதேசம் முழுவதும் சரிந்து கொண்டே இருந்தது நேரு-காந்தி என்ற பெயரை வைத்து அவர்கள் வாக்குகளை வாங்கி வந்தனர், இந்நிலையில் அமேதி, ரேபரேலி என்ற இரு இடத்தை அவர்கள் கோட்டையாக வைத்திருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு பரபரப்பான தேர்தலில் ராகுல் காந்தியை ஸ்மிருதி ராணி தோற்கடித்த போது அவர்களுக்கு அப்போதுதான் முதல் அதிர்ச்சி ஏற்பட்டது இந்த முடிவை சற்றும் எதிர்பாராத ராகுல்காந்தி அடுத்தபடியாக கேரளா வயநாட்டை நோக்கி நாட்டிற்கு ஓடினார்.


இந்நிலையில் கடந்த ஐந்து மாநில சட்டசபையில் முழுநேரமாக பிரியங்கா காந்தி காங்கிரஸ் பிரச்சாரத்தை கையில் எடுத்தவர் அதிகமாக உத்திரப்பிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக அமேதி மற்றும் ரேபரேலியில் அவர் அதிக அளவில் பிரச்சாரம் செய்தார் அதன் விளைவாக தற்போது அந்த இரண்டு பகுதிகளுமே காங்கிரஸின் கையை விட்டு சென்றுள்ளது. அங்கு காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.


Source - Opindia.com

Similar News