பா.ஜ.க'வின் மாபெரும் வெற்றியின் எதிரொலி - குடியரசுத் தலைவர் வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன்?

Update: 2022-03-11 12:45 GMT

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க'வின் எழுச்சி காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்கின்றன சில தகவல்கள்.


உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகளில் பஞ்சாப் தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.


இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்'தின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24'ம் தேதி நிறைவடைகிறது, இதனால் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை பா.ஜ.க கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவரானார். இவருக்கு ஆதரவாக 65.65 சதவீத வாக்குகள் விழுந்தன இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் களமிறக்கிய மீரா குமாருக்கு ஆதரவாக 34.35 சதவீத வாக்குகள் மட்டுமே விழுந்தன.


இந்நிலையில் தற்பொழுது பெரும்பாலான எம்.பி, எம்.எல்.ஏ'க்களை கைவசம் பா.ஜ.க வைத்துள்ளதால் ராம்நாத் கோவிந்த்'க்கு அடுத்தபடியாக ஒரு முக்கியமான வேட்பாளரை குடியரசுத் தலைவராக பா.ஜ.க முன் நிறுத்தலாம் என தெரிகிறது அப்படி முன்னறுத்தும் பொழுது அனைத்து கட்சிகளும் அவரை குடியரசுத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் எனவும் யோசித்து வருவதாக தெரிகிறது.


அந்த வகையில் 5 மாநில தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கிறார் இவர் பல கட்சிகளுடன் நட்பாக இருக்க கூடியவர், பலரும் இவரை ஏற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இதனால் இவரை பா.ஜ.க குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புகள் உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இப்பொழுது ஐந்து மாநில தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க பொது வேட்பாளரை களமிறக்க வேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ளது, இதனால் தமிழிசைக்கு அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற யூகமும் எழுந்துள்ளது.


Source - oneindia.com

Similar News