'இந்திரா ஆவாஸ் யோஜனா' மட்டும் புரிஞ்சிருக்குமே? - கிடுக்கிப்பிடி கேள்வியால் திணறிய எம்.பி.செந்தில்குமார்

Update: 2022-03-16 06:30 GMT

நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியதால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.


லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது தர்மபுரி தொகுதி தி.மு.க எம்.பி செந்தில்குமார் கூறியதாவது, "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பதன் ஆங்கில அர்த்தம் என்ன? இதற்கு எனக்கு பதில் தெரிந்தாக வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை போன்ற மக்கள் பிரதிநிதிக்கு இதன் அர்த்தம் விளங்கவில்லை தொகுதி மக்களுக்கு எப்படி புரியும்? என கேட்டார்.


இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சரும், பா.ஜ.க'வை சேர்ந்தவருமான சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியதாவது, "தர்மபுரி எம்.பி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பதன் அர்த்தம் புரியவில்லை என்கிறார் எனக்கும்தன் அவர் கேட்பது புரியவில்லை காரணம் இதே திட்டம் 'இந்திரா ஆவாஸ் யோஜனா' என்ற பெயரில் இருந்தபோது அவருக்கு புரிந்துள்ளது.


ஆனால் இப்பொழுது பிரதமர் பேரில் இருக்கும்போது மட்டும் அவருக்கு அர்த்தம் தெரியாமல் சிரமம் வந்துவிடுகிறதா? பிரதமர் பேரில் உள்ள திட்டம் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் புரிகிறது ஆனால் இவருக்கு மட்டும் புரியவில்லை புரியவில்லை என்றால் பாவம்" தான் என்றார்.


மேலும் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதில்லை மாநில அரசுக்குதான் நிதி ஒதுக்கீடு செய்கிறோம் அவர்கள் தான் அங்கு நடைபெறும் பணிகளுக்கு பொறுப்பு" இவ்வாறு கூறினார். மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற முழு நேர வேலையில் உள்ள தர்மபுரி எம்.பி செந்தில்குமாருக்கு இந்த பதில் லோக்சபாவில் கிடுக்கிப்பிடி கேள்வி போல் அமைந்தது.


SOURCE - DINAMALAR

Similar News