நாளை தமிழக பட்ஜெட் - தி.மு.க வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

Update: 2022-03-17 11:45 GMT

தமிழகத்தில் நாளை நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது, தி.மு.க'வின் தேர்தல் அறிக்கைகளில் பிரதானமானதாக கருதப்படும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.


தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது கூட்டம் தொடங்கியதும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார்.


தி.மு.க அரசு பொறுப்பேற்ற உடன் தாக்கல் செய்யும் முழு முதல் பட்ஜெட் இது என்பதால் தி.மு.க அரசின் வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மாதம் ஒருமுறை மின் கட்டணம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.


இந்நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியை பல விதங்களில் குறைசொல்லி நிர்வாகம் சரியில்லை ஊழல் நடக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எல்லாம் அடுக்கி தற்போது ஆட்சியைப் பிடித்த தி.மு.க இந்த பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா? தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு சொன்னது சொன்னபடி செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Source - OneIndia.com

Similar News