ஆம் ஆத்மி கட்சி முன்னாள் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை ராஜ்யசபா அனுப்ப உள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பஞ்சாபில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி முதல்வர் பகத்சிங் மான் புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சுழற்பந்து வீச்சாளரும் முன்னாள் கிரிக்கெட் அர்ஜுன் சிங் தனது ட்விட்டர் பதிவில் பதிந்ததாவது, "நமது புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது நண்பர் பகவத் மானுக்கும் வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பஞ்சாபில் 5 ராஜ்யசபா இடங்கள் வரும் மாதத்தில் காலியாக இருக்கின்றன, இந்நிலையில் ஹர்பஜன் சிங் பஞ்சாப் முதல்வர் பகவத்'திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்து பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பெரும் கேள்வி எழுந்துள்ளது! ராஜ்யசபா எம்.பி'யாக ஹர்பஜன் சிங் நியமிக்கப்படுவார் என்ற பரபரப்பும் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.