"இந்திய ராணுவத்தில் ஊழல் இல்லை, இந்தியாவை நான் தலைவணங்குகிறேன்!" இந்திய அரசை பாராட்டிய இம்ரான்கான்

Update: 2022-03-21 12:15 GMT

"இந்திய ராணுவத்தில் ஊழல் இல்லை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்ததாகும்" என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய அரசை பாராட்டியுள்ளார்.


பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு சரியாக வழிநடத்த தவறியதால் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டின் ராணுவம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கன்டனங்களை முன்வைத்து வருகின்றன.


பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது, இதையடுத்து வருகிற மார்ச் 25'ம் தேதி இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.


இந்த சூழலில் பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இம்ரான்கான் கூறும்பொழுது, "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்திய மக்களுக்கு சாதகமாக இருக்கும், குவாட் கூட்டணியில் இந்தியா உறுப்பினராக இருந்தாலும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிடமிருந்து இந்தியாவால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடிகிறது. இந்திய ராணுவத்தில் ஊழல் இல்லை, இந்திய அரசாங்கத்தில் அதன் ராணுவம் தலையிடாது இந்தியாவை நான் வணங்குகிறேன்! இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானதாக இருப்பதே இதற்கு காரணம். பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்ததாகும்" என இந்திய அரசை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டியுள்ளார்.



Source - Junior Vikatan

Similar News