உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வி குறித்து விரைவில் முடிவு - மத்திய அரசு

Update: 2022-03-21 12:45 GMT

உக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக அங்கு சிக்கிய இந்திய மாணவர்களை 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டது, மேலும் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பக்கத்து நாடுகளான போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் வரவழைக்கப்பட்ட அங்கிருந்து பயணிகள் விமானம் விமானப் படை மூலம் சிறப்பாக மீட்கப்பட்டனர்.


இந்நிலையில் உக்ரைன் சிக்கிய இந்தியர்களை மீட்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது, "உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் தங்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர்வது குறித்து மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர் உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு உளளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பதிலை தொடர்ந்து உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை நீக்கக் கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.


Source - Maalai Malar

Similar News