"அப்போ அது அரசு கார் இல்லையா?" துபாய் பயணத்தில் தி.மு.க'வின் போலி விளம்பரங்கள் அம்பலம்! - ஏன் இந்த விளம்பரம்?

Update: 2022-03-27 12:00 GMT

முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது, அதிலும் குறிப்பாக தி.மு.க'வினர் துபாய் அரசே முதல்வர் ஸ்டாலினை பி.எம்.டபிள்யூ எனப்படும் உயர்ரக காரை வைத்து மரியாதையுடன் அழைத்து சென்றுள்ளது என தமிழகத்தில் புகழ் விளம்பரம் செய்கையில், அது துபாய் அரசு அனுப்பிய வாகனம் இல்லை எனவும் துபாய் காவல்துறையில் அபராதம் நிலுவையில் உள்ள வாகனம் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.




 


துபாயில் தற்பொழுது நடக்கும் எக்ஸ்போ-2022'ல் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக குடும்பத்திலுள்ள பேரன், பேத்தி வரை அனைவரையும் அழைத்து சென்றுள்ளார் அரசு செலவில். துபாய் சென்று முதலீடுகளை ஈர்க்க போகிறார் என தி.மு.க தரப்பு கூறி வந்தாலும், 5000 கோடி ரூபாய் பணத்துடன் துபாய் சென்றுள்ளார் என பா.ஜ.க தரப்பு கூறி வருகிறது. இப்படி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் மேலும் ஒரு உண்மை வெளிவந்துள்ளது.




 


அதில் தமிழக முதல்வர் ஸ்டாலினை துபாய் அரசே பி.எம்.டபிள்யூ எனப்படும் உயர்ரக காரை அனுப்பி வரவேற்றதாக தி.மு.க தரப்பு ஒரு செய்தியை எல்லா ஊடகங்களும் சொல்கிறது. ஆனால், அந்த 5 இலக்க எண் துபாய் அரசினுடையது இல்லை எனவும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற,'36147 - private L' என்ற எண்ணைக் கொண்ட பி.எம்.டபிள்யூ வாகனம் துபாய் அரசினுடையது இல்லை என்பதைத் தாண்டி, துபாய் போக்குவரத்து காவல் நிலையத்தில் அந்த வானகத்தின் மீது துபாய் பணத்தில் 38625 திராம் அதாவது, இந்திய பணத்தின் மதிப்புப்படி 8,02,191.04 ரூபாய் அபராதம் நிலுவையில் உள்ளது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.






முதல்வர் ஸ்டாலினை அழைத்துக்கொண்டு சென்றது துபாய் அரசின் வாகனம் இல்லை, அரசினால் அபராதம் போடப்பட்டு அதை கட்டாமல் நிலுவையில் வைத்திருக்கும் தனியார் வாகனம் என்ற உண்மை தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இதன் தகவல்களை இணையத்தில் பரவலாக வலம் வருகின்றன.


துபாய் அரசு அனுப்பியதாக தனியார் வாகனத்தை அனுப்ப அதிலும் காவல்துறையால் அபராதம் போடப்பட்ட வாகனத்தை அனுப்பி போலி விளம்பரம் தி.மு.க செய்வது அம்பலமாகியுள்ளது, இந்த கார் விஷயத்திலேயே இவ்வளவு போலி விளம்பரம் என்றால் முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் எவ்வளவு போலி விளம்பரம் இருக்கும் என இப்பொழுதே பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

Similar News