பாகிஸ்தானில் இன்று அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மனாம் - இம்ரான் அரசு தப்புமா?
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் மீது அரசு மீது எதிர்க்கட்சிகள் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன. இதனால் இம்ரான்கான் அரசு தப்பிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் நேற்று மக்கள் பேரணியில் கலந்துகொண்ட இம்ரான்கான் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். இம்ரான்கான் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என நம்பப்படுவதால் இம்ரான்கான் அரசு கவிழ வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று மாலை இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான முன்னிலையில் இம்ரான்கான் பேசினார், அப்பொழுது அந்த நகரமே ஸ்தம்பித்தது. இம்ரான்கானுக்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த பேரணியில் பங்கேற்றனர், பேரணி நடந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய இம்ரான்கான் தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார் அப்பொழுது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் கடுமையாக சாடிப் பேசினார்.