"சாதாரண மக்கள் சாதி பற்றி பேசினால் விடுவீர்களா? ராஜகண்ணப்பன் மேல கேஸ் போடுங்க" சீறும் அண்ணாமலை

Update: 2022-03-30 07:45 GMT

பட்டியலின பிரிவை சேர்ந்த அரசு அதிகாரியை அவரது சமூகத்தை சொல்லி இழிவாக பேசியதாக துறை மாற்றப்பட்டிருக்கும் தி.மு.க அமைச்சர் மீதான குற்றத்திற்கு "சாமானிய மக்களுக்கும் இதே சட்டம் பொருந்துமா?" என கேள்வி எழுப்பி உள்ளார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.


முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ'வாக பணியாற்றி வரும் அதிகாரி ராஜேந்திரன் அவர்களை தி.மு.க'வின் அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர் சார்ந்த பட்டியலின சாதியைச் சொல்லி சாதியைச் சொல்லி இழிவாகப் திட்டியதாக தெரிகிறது. இதனை அந்த அதிகாரி மனமுடைந்து வெளியே கூறினார். இதனால் மனமுடைந்த அவர் இது தொடர்பாகவும் புகார் அளித்திருந்தார், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் தமிழக அரசு நேற்று ராஜகண்ணப்பன் அவர்களை துறை மாற்றி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக அறிவித்தது.


அரசியல் அரங்கில் பல சலசலப்புகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பும்போது, "முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ'வாக பணியாற்றிவரும் ராஜேந்திரன் அவர்கள் தன்னை அமைச்சர் ராஜகண்ணப்பன் சமுதாய ரீதியாக திட்டுவதாக குற்றம் சாட்டி இருந்தார் இன்று ராஜகண்ணப்பன் அவர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி அரசு அறிவித்துள்ளது, சாமானிய மக்களுக்கும் இதே சட்டம் பொருந்துமா வழக்குப்பதிவு செய்யாமல் துறை மாறுதல் எந்த மாதிரியான முடிவு அமைச்சர் ராஜகண்ணப்பன் மேல் உடனடியாக வழக்கு பதிவு செய்து உண்மையான நியாயம் கிடைக்கவேண்டும் இந்த அரசு விரும்பினால் ராஜகண்ணப்பன்  அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.



Source - Annamalai Tweet

Tags:    

Similar News