மத்திய அரசுதான் காரணம் என மீண்டும் மீண்டும் மத்திய அரசின் மீது பழிபோடும் கே.என்.நேரு!

Update: 2022-04-05 11:15 GMT

மத்திய அரசின் பரிந்துரையால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுளளது என மாநில அரசு சொத்து வரியை உயர்த்தியதற்கு மத்திய அரசின் மீது பழிபோட்டு வருகிறார் திமுக அமைச்சர் கே.என்.நேரு.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் சொத்து வரி விகிதங்களை மாநில உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் சொத்து வரி குறித்த அறிக்கை வெளியிடுவது கட்டாயம் என்று திட்ட வழிகாட்டுதலை மத்திய அரசால் குறைக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற காரணங்களினால் மத்திய அரசு வழிகாட்டுதலின் படியே சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

தமிழ் மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என பல வாக்குறுதிகளை கொடுத்து விட்டு தற்போது ஆட்சிக்கு வந்து எதுவுமே செய்யாமல் கையறு நிலையில் இருக்கும் தி.மு.க வேறுவழியின்றி வரியை உயர்த்தி உள்ளது. இந்த சூழலில் தி.மு.க அரசு வரியை உயர்த்தியது என மக்கள் கோபப்படாமல் இருக்க மத்திய அரசின் மீது பழிபோட்டு அனைத்து அரசியல் விஷயங்களில் இருந்தும் தப்பிக்கலாம் என நினைப்பது போல் இந்த விஷயத்திலும் தப்பிக்கலாம் என நினைத்து கூறி வருவதாக தெரிகிறது.

Source - Maalai malar

Similar News