'கலவரத்திற்கு ரோஹிங்கியாக்களும், வங்கதேசத்தினரும் பொறுப்பு' - ஜஹாங்கிர்புரி கடைக்காரர்கள் கூறும் உண்மை என்ன?
ஏப்ரல் 16, 2022 அன்று டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது கலவரக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர், இந்த சம்பவத்தில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள சிறிய கடைகளின் உரிமையாளர்களும் கல் வீச்சுக்கு பின் ஏற்பட்ட வன்முறையில் குறிவைக்கப்பட்டனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேச முஸ்லிம்களின் குற்றச் செயல்களால் தாங்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த பகுதியில் முஸ்லிம்களின் கும்பலால் தாக்கப்பட்ட சிறு கடைகளின் உள்ளூர் உரிமையாளர்கள், அப்பகுதியில் நடந்த குற்றங்களுக்கு ரோஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷ் இஸ்லாமியர்கள் தான் காரணம் என கூறுகின்றனர்.
பிரதீப் பண்டாரி ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், ஒரு சிறிய கடையின் உள்ளூர் உரிமையாளர், கலவரக்காரர்களால் அங்குள்ள சிறு வணிகங்கள் மற்றும் கடைகாரர்களுக்கு ஏற்படும் அட்டூழியங்களைப் பற்றி தெரிவிக்கிறார். அவர் கூறுகையில், "அவர்கள் (கலவரக்காரர்கள்) தாக்கியபோது, அவர்கள் இந்தியக் கொடியையும் சேதப்படுத்தினர். ஹனுமான் சிலை மீது கற்களை வீசினர். பின்னர் அவர்கள் முன்னே சென்று இங்கு வந்து சேர்ந்தனர். எங்களுடைய இந்தக் கடையை உடைத்தனர். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர்கள் இங்கு வந்து எங்கள் கடையை உடைத்தனர். நாங்கள் அவர்களால் அதிகம் துன்பத்தை அனுபவிக்கிறோம், இவர்கள் பங்களாதேஷ் இஸ்லாமியர்கள்" என கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், ''சி-பிளாக் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. எங்கள் மகள்கள், சகோதரிகள் மற்றும் பெண்கள் தினசரி காய்கறிகளை வாங்க அங்கு செல்கிறார்கள். இந்த நபர்கள் அவர்களை கிண்டல் செய்ய முயற்சிக்கிறார்கள், சில சமயங்களில் அவர்கள் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள். சில சமயங்களில் மொபைல் போன்களையும் பறித்து விடுகின்றனர். அனைத்து வகையான கோரிக்கைகள் மற்றும் புகார்கள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் இந்தியாவில் இதுவரை யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இந்தியாவில் வாழ்கிறோம். நாங்கள் சொல்வதைக் கேட்பதில் யாருக்கும் ஆர்வம் இல்லை. அவர்கள் வெளியாட்கள். அவர்கள், ரோஹிங்கியாக்கள் வங்கதேசத்தில் இருந்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் ஒவ்வொரு பிரச்சினைகள் மற்றும் கவலையும் கவனமாக இங்கு கேட்கப்படுகிறது" என்றார்.