ஜஹாங்கீர்புரிங்கு செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் - தடுத்த காவல்துறையினர் என்ன நடந்தது?

Update: 2022-04-21 13:15 GMT

டெல்லி ஜஹாங்கீர்புரி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட வந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளார்.


டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது, இது தொடர்பாக இரு தரப்பிலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் ஜஹாங்கீர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி மாநகராட்சி முடிவு செய்தது.


அதன்படி 1500 போலீசார் பாதுகாப்புடன் ஜஹாங்கீர்புரி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன, இதற்கு டில்லி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த செயலுக்கு பா.ஜ.க'வை எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் விமர்சித்து வருகின்றனர், இந்த நிலையில் வீடுகளை இழந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் ஜஹாங்கீர்புரி செல்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மேக்கான் தலைமையில் காங்கிரசார் ஜஹாங்கீர்புரி காரில் சென்றனர்.


இந்தநிலையில் ஏற்கனவே கலவரமாக இருக்கும் அந்த பகுதிக்கு சென்றால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என போலீசார் அவர்களை கேட்டுக்கொண்டு தொடர்ந்து மேலே செல்ல அனுமதிக்காததால் அங்கிருந்த காங்கிரஸார் திரும்பிச் சென்றனர். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மேக்கான் கூறுகையில், 'இந்த இடிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக இருந்துள்ளேன் சட்டங்கள் என்ன என்பது எனக்கு தெரியும்" என கூறினார். முன்னதாக ஜஹாங்கீர்புரி பகுதிக்கு செல்ல அசாதுதீன் ஓவைசி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



Source - OneIndia.com

Tags:    

Similar News