'இந்தியா மோடியால் தான் வலிமை பெற்றது' - எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த பசவராஜ் பொம்மை
'இந்தியாவை உலக அரங்கில் வலிமையாக்கியது மோடி தான்' என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா கடந்த சில தினங்களுக்கு முன்பு நேருவுடன் மோடியை ஒப்பிட முடியாது என கூறினார். இதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது, 'நிச்சயமாக மோடியை நேருவுடன் ஒப்பிட முடியாது இந்தியாவை வலிமையாக்கியதே மோடி தான்' என பதிலளித்துள்ளார்.
மேலும் பேசிய பசவராஜ் பொம்மையை கூறியதாவது, 'நிச்சயமாக மோடியை நேருவுடன் ஒப்பிட முடியாது சீனாவின் படையெடுப்பின்போது நேரு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணை விட்டுக் கொடுத்தார். ஆனால் மோடி சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்து இந்திய மண்ணை காப்பாற்றினார்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'பாகிஸ்தானுடன் மோடி சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்தியாவின் ஒற்றுமைக்காகவே உழைத்தவர் மோடி இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன. முக்கியமாக இந்தியாவில் வலிமையாக்கியது மோடி தான்' என்றார்.
Source - Junior Vikatan
Image source - ANI