தி.மு.க'வினரை எச்சரித்த ஸ்டாலின் - இந்த முறையாவது கேட்பார்களா அல்லது வழக்கம்போல் அலட்சியம் செய்வார்களா?

Update: 2022-05-29 14:15 GMT

உட்கட்சித் தேர்தலில் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க'வினரை ஸ்டாலின் எச்சரித்துள்ளார் ஆனால் இதனை கட்சியினர் ஏற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, 'திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பரவி விட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.


மதவாத, தேசவிரோத சக்திகளுடன் இணைந்து தமிழ் நாட்டை பாதுகாக்கும் விதமாக திராவிட மாடல் பயிற்சி பட்டறை நடத்த வேண்டும் என தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது உட்கட்சித் தேர்தலில் சில இடங்களில் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் செய்த தவறு குறித்து முழுமையான அறிக்கை வந்திருப்பதாகவும் தலைமை கழக நிர்வாகிகள் விசாரணைக்கு பிறகு நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் இதற்கு முன்னரே உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க'வினர் கூட்டணி கட்சியினருக்கு இடங்களை விட்டு கொடுக்க வேண்டும் என முதல்வர் எச்சரித்தும் நடையில் தி.மு.க'வினர் கேட்கவில்லை இந்த முறையும் முதல்வர் எச்சரித்துள்ளார் அதனை தி.மு.க;வினர் கேட்பார்களா அல்லது வழக்கம்போல் அலட்சியப்படுத்துவர்களா என்பது போகப் போகத் தெரியும்.


Source - News 18 Tamil

Similar News