நீ வாடா ராசா! வா! உதயநிதியை கொம்பு சீவி விடும் ஸ்டாலின்! கொத்தடிமைகளாக பாவிக்கப்படும் சீனியர்ஸ்!

Update: 2021-03-06 03:46 GMT

திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த சூழலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவலிக்கேணி தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. 

ஏற்கெனவே உதயநிதிக்கு கட்சியில் இளைஞரணிச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவருக்கு கட்சிக்குள் அளிக்கப்படும் முக்கியத்துவமும் சீனியர் பொறுப்பாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசியல் பிரவேசம் கண்ட குறுகிய காலத்தில் தேர்தலில் சீட் வழங்கப்பட்டால் மேலும் சலசலப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்றுடன் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் முடிவுறுகிறது. கடைசி நாளான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்கின்றனர். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர்.

நேர்காணல் இன்றுடன் முடியும் நிலையில், வரும் 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய துரைமுருகன் "கருணாநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் இருந்தான். ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருப்பான், நாளை உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பான்" என்று கூறி தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். 


Similar News