தி.மு.க உறுப்பினரிடமே நிலத்தை அபகரித்த ராயபுரம் தி.மு.க வேட்பாளர் - ஸ்டாலினிடம் புகார் அளித்தும் பலனில்லை என நிலத்தை இழந்தவர் புலம்பல்!

Update: 2021-04-05 07:15 GMT

தேர்தல் காலம் என்றால் என்னாதான் ஒரு அரசியல்வாதி தவறு செய்பவராக இருந்தாலும் குறைந்தபட்சம் அந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் கூட தவறுகள் செய்யாமல் அமைதியாக இருப்பார். ஆனால் இதற்கு தி.மு.கவினர் விதிவிலக்கு தேர்தல் இல்லாத சமயங்களில் என்ன குற்றங்கள் செய்கின்றனரோ அதே அளவு குற்றங்களை தேர்தல் நேரத்தின் போதும் பாரபட்சமில்லாமல் அதே அளவு குற்றங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தேர்தல் நேரம் என்று கூட பார்க்காமல், ஏன் தன் கட்சி உறுப்பினர் என்று கூட பார்க்காமல் நிலத்தை அபகரித்துள்ளார் ராயபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தி.

ராயபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தி தனது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக முத்து என்பவர் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது, "ராயபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி வாகனம் நிறுத்தும் இடத்திற்காக தனது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், இது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை" எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறிய அவர், "தி.மு.க கட்சியை சேர்ந்த எனக்கே இந்த கதி என்றால், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களின் கதி என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்".

தி.மு.க உறுப்பினரிடமே நிலத்தை தி.மு.க வேட்பாளர் ஆட்டையே போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News