வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வீடியோ விவகாரம் - தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு மீது வழக்கு பாய்ந்தது!

Update: 2021-04-06 02:00 GMT

இன்று தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் முதல் சமீபத்தில் துவங்கப்பட்ட கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் களம் காண்கின்றன. நேற்று முன்தினம் இரவு 7 மணியோடு பிரச்சாரம் ஓய்ந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கே.என்.நேரு மீது வழக்கு பாய்ந்துள்ளது.

திருச்சியில் உள்ள காவல் நிலையங்களில் தபால் வாக்குப் பதிவுக்கு பண பட்டுவாடா செய்வதாக ஏற்கனவே கே என் நேரு மீது குற்றச்சாட்டு எழுந்தது இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கே என் நேரு தன்னுடைய ஆதரவாளர்களுடன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முசிறி காவல்நிலையத்தில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, கரூர், திருவண்ணாமலை ஆகிய 5 தொகுதிகளில் தி.மு.க'வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News