திமிர் பேச்சின் எதிரொலி - இன்று மாலை வரை உதயநிதிக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

Update: 2021-04-07 09:45 GMT

நேற்று தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தல் பிரச்சாரம் சென்ற ஞாயிறு மாலை ஏழு மணியுடன் முடிவடைந்த நிலையில் பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறிய வேட்பாளர்களின் மீதான புகார்கள் விசாரணைக்கு எடுத்துகொள்ள பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க தலைவரின் மகளுன், சென்னை சேப்பாக்கம் தொகுதியின் வேட்பாளருமாகிய உதயநிதி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே உயிரிழக்க நேரிட்டது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாரின் அடிப்படையில் இன்று மாலை 5 மணிக்குள் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளிக்க கெடு விதித்துள்ளது.

முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. இரு கூட்டணி கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில், தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே உயிரிழக்க நேரிட்டது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரின் இந்தப் பேச்சு குறித்து சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜேட்லி ஆகியோரின் மகள்கள் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 2'ம் தேதி பா.ஜ.க அந்த புகாரை கொடுத்தது.

இதனைதொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் நேரில் விளக்கமளிக்க கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News