"அலர்ட்டா இருங்கப்பா" உடன்பிறப்புகளை உசுப்பிவிடும் ஸ்டாலின் - சலிப்படையும் தொண்டர்கள்!

Update: 2021-04-07 10:00 GMT

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முடிந்தது. இதனைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2'ல் நடைபெற உள்ளதால், அதுவரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியின் உடன்பிறப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை அளித்துள்ள அவர் குறிப்பிட்டுள்தாவது, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு அவற்றை காவல் துறையும் தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக்கொள்ளட்டும் என்று நாம் இருந்திடலாகாது.

நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்துவிடக் கூடாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மையங்களைப் பாதுகாப்பது நம் கடமை. வேட்பாளர்களும், நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பாதுகாக்கப்பட்ட மையங்களை 24 மணி நேரமும் இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும். வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் 'டர்ன் டியூட்டி' அடிப்படையில் அமர்ந்து கண்காணித்திட வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது!" என தொண்டர்களுக்கு அலர்ட் செய்தி அளித்துள்ளார்.

ஏற்கனவே நான்கு மாத காலத்திற்கு முன்னரே தேர்தல் பிரச்சாரம், தற்பொழுது "இது வேறயா" என களத்தில் உள்ள தி.மு.க தொண்டர்கள் சலிப்படைந்து வருவதை பார்க்க முடிகிறது.

Similar News