"நான் தப்பா பேசலைங்க! கொஞ்சம் டைம் குடுங்க" - தேர்தல் ஆணையத்திடம் பம்மிய உதயநிதி

Update: 2021-04-08 01:00 GMT

"சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து நான் அவதூறாக பேசவில்லை, இது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை" என தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. இரு கூட்டணி கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில், தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே உயிரிழக்க நேரிட்டது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரின் இந்தப் பேச்சு குறித்து சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜேட்லி ஆகியோரின் மகள்கள் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 2'ம் தேதி பா.ஜ.க அந்த புகாரை கொடுத்தது.

இதனைதொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் நேரில் விளக்கமளிக்க கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புகாருக்கு இன்று மாலை உதயநிதி விளக்கமளிக்கும் வகையில் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் அவர், "கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் தான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இதனை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை. ஒரு பகுதி உரையை மட்டுமே கவனத்தில் கொண்டு, என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது" என தற்காலிக விளக்கம் அளித்து தேர்தல் அணையத்திடம் அவகாசம் கேட்டுள்ளார்.

Similar News