தமிழக தேர்தல் பற்றி ஏதும் கூறாமல் அமைதி காக்கும் பிரஷாந்த் கிஷோர் - கலக்கத்தில் தி.மு.க உடன்பிறப்புகள்!

Update: 2021-04-12 02:45 GMT

மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் எனச் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என இதுவரை பிரஷாந்த் கிஷோர் கூறாமல் மௌனம் காப்பது தி.மு.கவினரை கலக்கமடைய செய்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட சட்டசபை தேர்தலில், மேற்கு வங்கத்தில் மட்டும் இன்னும் 3 கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. இந்த தேர்தலில், தி.மு.கவுக்கு பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் செயல்பட்டதை போன்று மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோரே வகுத்து கொடுத்தார்.

இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலில் பா.ஜ.கதான் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ வெளியானது. மேலும் அதில், "மேற்குவங்கத்தில் மோடிக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு உருவாகியுள்ளது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை . நாடு முழுவதும் மோடி அலை தென்படுகிறது. மேற்குவங்கத்தைப் பொறுத்தவரையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருக்கிறது. எனவே பா.ஜ.க தான் வெற்றி பெறப்போகிறது. மேற்குவங்கத்தில் 27 சதவீதம் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு மோடிக்குதான் விழப்போகிறது" என கூறியிருந்தார்.

பின் தனது ட்விட்டர் பதிவில் மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான அரசுதான் அமையும் என சமாளித்து பதிவிட்டிருந்தார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மிகவும் கொதிப்படைந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் தேர்தல் அனைத்தும் முடிந்த நிலையில் ஏன் ஐபேக் நிறுவனம் சார்பில் ஏதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என தி.மு.க வினர் சற்றே குழம்பி போய் உள்ளனர். கடந்த 8 மாதங்களாக அதிகாரப்பூர்வமாக தி.மு.கவிற்கு வேலை செய்து விட்டு தமிழ தேர்தல் முடிந்தவுடன் ஆளை விட்டால் போதும் என்கிற ரேஞ்சில் பிரஷாந்த் கிஷோர் சென்றது தி.மு.க'வினரிடையே பீதியை கிளம்பி உள்ளது.

இதற்கு பிரஷாந்த் கிஷோர் தரப்பு என்ன விளக்கம் குடுக்கப்போகிறதோ?

Similar News