"நாங்க தகராறு பண்ணுவோம் நீ எப்படி கேட்கலாம்" என போலீஸ் எஸ்.ஐயை தாக்கிய ஊத்தங்கரை தி.மு.க உடன்பிறப்புகள்!

Update: 2021-04-14 05:30 GMT

தமிழகத்தில் தேர்தல் காலமானாலும் சரி, தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு காத்திருக்கும் காலமானாலும் சரி எங்களுக்கு எல்லாம் ஒரே அராஜக காலம்'தான் என தி.மு.க'வினர் அடிக்கடி நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் சிங்காரப்பேட்டை அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய தி.மு.க'வைச் சேர்ந்த 20 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர் போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கொட்டுக்காரன்பட்டி கிராமத்தில் சிலர் கிராமத்தில் ஓரிடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளதாக, சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தலைமைக் காவலர் ராஜா, போலீஸார் புஷ்பராஜ், பச்சையப்பன் ஆகியோர் அந்த கிராமத்துக்குச் சென்றனர்.

அந்த கிராமத்தில் நடராஜன் என்பவரது வீட்டின் அருகே சிலர் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீஸார், என்ன தகராறு என கேட்க அதற்கு தி.மு.க'வைச் சேர்ந்த கற்பூரசுந்தர பாண்டியன் என்பவர், "ஏன் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தவர் பிரச்சினை குறித்து தெரிவிக்கவில்லையா" எனக் திமிறாக பேசியுள்ளார்,மேலும் "இங்கு என்ன 144 தடை உத்தரவு அமலில் உள்ளதா" எனக் கேட்டு தகராறில் வேறு ஈடுபட்டார்.

அப்போது போலீஸாருக்கும், தி.மு.க'வை சேர்ந்த கற்பூரசுந்தர பாண்டியன் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கற்பூரசுந்தர பாண்டியன், தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான குமரேசன், கற்பூரசுந்தர பாண்டியனின் அண்ணன் மகன் மோகன் மற்றும் சிலர் சேர்ந்து எஸ்.ஐ கார்த்திகேயனை தாக்கினர். அதில் அவருக்கு கன்னத்தில் காயமும், காது, கழுத்து மற்றும் நெஞ்சில் உள்காயம் ஏற்பட்டது.

இந்த தகவலை அறிந்த மேலும் சில போலீஸார் ஜீப்பில் அங்கு வந்தனர். அவர்களைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட எஸ்.ஐ கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் 5 பிரிவுகளில் தி.மு.க'வைச் சேர்ந்த கற்பூரசுந்தர பாண்டியன், மோகன், குமரேசன் உள்ளிட்ட தி.மு.க'வைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News