தரமற்ற 100 டன் வெல்லம் திருப்பி அனுப்பப்படுகிறது - தோல்வியை ஒப்புக்கொண்ட தி.மு.க அரசு

Update: 2022-01-15 12:15 GMT

தரமற்ற வெல்லம் வாங்கியது அம்பலமானதால் தி.மு.க அரசு 100 டன் அளவுள்ற வெல்லத்தை தி.மு.க அரசு வாங்கிய இடத்திற்கு திரும்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பிர் 'பொங்கல் பரிசுப்பொருள்கள்' தொகுப்பு என்ற பெயரில் 21 சாமான்களை அடங்கிய பையை தி.மு.க அரசு நியாய விலை கடைகள் மூலம் வழங்கியது. அதில் வழங்கப்பட்ட பொருள்கள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக அதில் வழங்கப்பட்ட வெல்லம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இதனை சட்டசபைக்கு வெளியே எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி படம் போட்டு காட்டினார். சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக வெல்லம் உருகிய நிலையில் உள்ள வீடியோக்கள் பரவி வந்தன. தி.மு.க அரசு அவை தரமான பொருள்கள் தான் என மடைமாற்றும் விதமாக பேசினாலும் 'தி.மு.க ஆட்சியில்' எப்போதும் இப்படிதான்பா' என பொதுமக்கள் அலுத்துக்கொள்ளும் அளவிற்கு தரமற்ற பொருள்கள் இருந்தன. திருவண்ணாமலை மாவட்டத்தில் தரமற்ற வெல்லத்தை மக்களுக்கு வழங்க கூடாது என ஆட்சியர் கைப்பற்றி நடவடிக்கை எடுத்த சம்பவம் கூட அரங்கேறியது.

இந்நிலையில் அனைத்து பக்கமும் தரமற்ற பொருள்கள் வழங்கியதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் இது நல்ல ஆட்சி என விளம்பரப்படுத்த இது தடையாகும் என புரிந்துகொண்ட தி.மு.க அரசு இனி இந்த வெல்லத்தை விநியோகிக்க கூடாது என முடிவெடுத்துள்ளது.

இதன் பலனாக சுமார் 100 டன் அளவிலான தரமற்ற வெல்லத்தை வாங்கியவர்களிடம் திருப்பி அனுப்ப உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி தரமற்ற வெல்லம் வழங்குவது கலப்பட உணவுப்பொருள் வழங்குவதற்கு சமம் எனவே இதனை வழங்கி மக்களின் சாபத்தை வாங்க வேண்டாம் என விளம்பர புகழ் தி.மு.க அரசு திருந்தியுள்ளது.


Source - Asianet NEWS

Similar News