"ஹும் ஒரு 1000 ரூபாய் பொங்கலுக்கு கொடுத்திருக்கலாம்" - ஏக்க பெருமூச்சுடன் கூறிய சீர்காழி தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்

Update: 2022-01-23 09:30 GMT

"பொங்கல் பரிசுடன் ரூ.1000 பணமும் கொடுத்திருந்தால் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிம் வெற்றியை பெற்றிருக்கலாம்" என தி.மு.க எம்.எல்.ஏ'வே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் இல்லாமல் பரிசுப்பொருள்கள் என 21 தரமில்லாத பொருள்களை தி.மு.க வழங்கியது. இதற்கு மக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின, பல இடங்களில் சாலை மறியல், போராட்டங்கள் வெடித்தன. ஆரம்பத்தில் அவற்றை தி.மு.க மறைத்து மடைமாற்ற முயன்றாலும் தோல்வியுற்று பின்னர் பொருள்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கிறோம் 'என எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை' என்பது போன்று தோல்வியை ஒப்புக்கொண்டது தி.மு.க.

இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரே பரிசுப்பொருள்களுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கலாம் என பேசியது பரபரப்பாகி வருகிறது. சீர்காழி தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் சீர்காழியில் நடந்த தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டதில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் தேர்தலில் வெற்றிக்கு உழைக்க வேண்டும், மக்கள் எதிர்பார்த்தது போல் பொங்கல் பரிசு பொருளுடன் சேர்த்து பரிசு தொகை 1000 ரூபாய் கொடுத்திருந்தால் நாமதான் 100 சதவிகித நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றிருக்கலாம்" என கூறி அங்கிருந்த தி.மு.க உடன்பிறப்புகளையே அதிர வைத்தார்.

கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் எடப்பாடி அரசு என ஜம்பமாக பேசி பிரச்சாரம் செய்த அப்போதைய எதிர்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலினே அமைதியாக இருக்க சீர்காழி எம்.எல்.ஏ இப்படி 1000 ரூபாய் கொடுத்திருக்கலாம் என ஏக்க பெருமூச்சு விட்டபடி பேசியது மறந்த மக்களுக்கு ஞாபகம் வரவழைத்தது போல் உள்ளது.


Source - One India tamil

Similar News