உதயநிதியிடம் ரூ.1000, நகை கடன் தள்ளுபடி எங்கே என்று கேள்வி எழுப்பிய பெண்ணை மிரட்டிய தி.மு.க.!

Update: 2022-02-10 08:16 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது கேள்வி கேட்ட பெண்ணை திமுகவினர் மிரட்டியுள்ள சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நூற்றுக்கணக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக வெளியிட்டு ஆட்சியை பிடித்தது. ஆனால் வெற்றி பெற்ற பின்னர் எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக ரேஷன் அட்டைக்கு ரூ.1000 மற்றும் நகை கடன் தள்ளுபடி என கூறியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் எதுவுமே நிறைவேற்றவில்லை.

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் திமுக கூட்டணியின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சிக்கு வாக்களிப்பதில்லை என்று வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுகு இளைஞரணி செயலாளர் உதயநிதி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது அங்கு இருந்த பெண்கள் கடந்த தேர்தலில் சொன்ன ரூ.1000 மற்றும் நகை கடன் தள்ளுபடி என்னாச்சி என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அங்கு இருந்த திமுக நிர்வாகிகள் யாருமா அது வாய் மூடுமா என்ற வார்த்தையை உபயோகித்து பெண்ணை மிரட்டியுள்ளனர். இது பற்றி வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Facebook

Tags:    

Similar News