மழையினால் சென்னையில் பறிபோன இரு உயிர்கள் - முதல்வரோ "ஜெய்பீம்" ப்ரமோஷனில் !
சென்னை கிண்டியில் உள்ள பள்ளத்தில் சிக்கி முகம்மது யூனுஸ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி மாநகர அரசு பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சின்னமலை வழியாக நேற்று காலை 8.40 மணியளவில் சென்றது . அப்போது அதே வழியாக இரு சக்கர வாகனத்தில் ராமாபுரத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்ற ஐ.டி ஊழியர் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது தனியார் விடுதிக்கு எதிரே சாலையில் உள்ள மழை நீர் தேங்கி நின்றது. அதில் இருந்த பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறியுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதினார். இதனால் விபத்து ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த முகமது யூனுஸ்சின் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியுள்ளது. இதனால் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேபோல் இன்று காலை தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில், முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது ஒரு வார மழைக்கே இதுபோல் விபத்துக்கள் சென்னையில் நடைபெறும் நிலையில் ஆளும் தி.மு.க அரசிற் முதல்வரோ "ஜெய்பீம்" படம் படம் பார்த்துவிட்டு கருத்து கூறிக்கொண்டிருக்கிறார்.