விநாயகர் கோவில் நிலத்தை உப்பளமாக்க முயற்சித்த தி.மு.க அரசு - குட்டு வைத்த நீதிமன்றம்!

Update: 2022-01-06 11:45 GMT

தி.மு.க அரசு விளாத்திகுளம், குளத்தூர் கோவில் நிலத்தை உப்பளமாக மாற்றுவதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தி.மு.க அரசின் அறநிலையத்துறை மதுரை விளாத்திகுளம், குளத்தூர் குழந்தை விநாயகர் கோவில் நிலத்தை உப்பளமாக மாற்ற முயற்சித்தது. இதற்கு சொந்தமாக 49.60 ஏக்கர் விவசாய நிலத்தை உப்பு உற்பத்திக்காக மாற்றம் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்தது.


இந்நிலையில் வழிபாட்டு தளத்தை வணிக நோக்கில் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம ஊராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் குளத்தூரை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.



இந்த மனுவின் மீதான விசாரணையில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் தரப்பு கூறியதாவது, "இம்மனுவின் விசாரணை இவ்விவகாரம் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும், மேலும் அறநிலையத்துறை கமிஷனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Source - Dinamalar

Similar News