ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - உயர் கல்வி துறையின் அந்தர்பல்டி

Update: 2022-01-21 11:00 GMT

அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தி.மு.க அரசு பல்டியடித்துள்ளது.


கடந்த இரண்டு மாதங்கள் முன் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கள் பாடங்கள் முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட்டன ஆனால் தேர்வுகளை நேரடியாக நடத்துவதாக பல்கலைக்கழகங்கள் அறவித்துள்ளன இது வேண்டம் ஆன்லைனில் பாடம் நடத்தினால் ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க அரசும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர்களை அடித்து விரட்டி அடக்குமுறையை கையாண்டது. அப்பொழுது தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடைபெறும் என உயர்கல்வித்துறை சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது கொரோனா பரவலை காரணம் காண்பித்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது, "அரசு மற்றும் தனியார் கல்லூர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் நடத்திய பாடத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும், கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வதற்கு தாமதமானாலும் ஏற்றுக்கொள்ளப்படும். இறுதி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதனடிப்படையில் இறுதி தேர்வர்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். கொரோனா பரவல் குறைந்த பிறகே நேரடி வகுப்புகள் நடத்தப்படும்" என தெரிவித்தார்.


Source - Maalai malar

Similar News