தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை! யாரை காப்பாற்ற முதல்வரே?

Update: 2022-01-22 10:00 GMT

பொங்கல் பரிசுப்பொருள்களை தரமற்றமாக வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ரொக்க பணம் இல்லாமல் பரிசுப்பொருள்கள் மட்டுமே வழங்கியது தி.மு.க அரசு. நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுப்பைகளில் வழங்கப்பட்ட பரிசுப்பொருள்கள் என்ற பெயரில் தரமில்லாமல் பொருள்கள் இருந்தன. குறிப்பாக உருகிய வெல்லம், அதில் மருத்து உபகரமான ஊசி, துணி, மரத்தூள் கலந்த மிளகாய் தூள், இலவம்பஞ்சு கொட்டை கலந்த மிளகு போன்ற மக்கள் பயன்படுத்த இயலாத பொருள்களை தி.மு.க அரசு வழங்கியது. முதலில் புகார் எழுத்தவுடன் புகார் அளித்தவர்களை கைது செய்தது தி.மு.க அரசு, இதுமட்டுமின்றி தி.மு.க அரசு மீது அவதூறு பரப்பவே இந்த புகார்கள் என முதல்வர் ஸ்டாலின் வேறு சமாளித்தார்.

பின்னர் புகார்கள் மாவட்டம் வாரியாக அதிகமாகிவிட்ட நிலையில் மக்களை சமாளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அந்த கூட்டத்தில் இப்படி தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அந்த நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதலில் இல்லை என சமாளித்த முதல்வர் பின்பு புகார்கள் அதிகமானவுடன் வழங்கப்பட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் காரணம் என்ன என மக்கள் இப்பொழுதே கேட்க துவங்கிவிட்டனர். மேலும் தரமற்ற பொருள்களை சரிபார்க்காமல் மக்கள் வரிப்பணத்தை கோடிகளில் இறைத்து வாங்கிய சம்மந்தப்பட் துறை அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.


Source - Maalai malar

Similar News