"கைது செய்யப்பட்ட 15 சிறுத்தை குட்டிகளை காப்பாற்ற முடியவில்லையே!" - புலம்பும் திருமாவளவன் !

Update: 2021-09-24 07:00 GMT

"சேலம் மாவட்டத்தில் வி.சி.க கொடியை ஏற்றிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளையும் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேசியும் என்னால் முடியவில்லை" என வேதனையுடன் திருமாவளவன் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் இரா.அசோக் குமார் என்பவரின் ஆயுத விரல் என்னும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றிய 15 விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டதை குறிப்பிட்டு பேசிய திருமாவளவன் கூறியதாவது, "விடுதலை சிறுத்தைகள் துவக்க காலத்தில் போதிய பொருளாதார கட்டமைப்புகள் இல்லை, ஊடக ஒத்துழைப்பு இல்லை, தன்னோடு கட்சி தொடங்கியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். 30 ஆண்டுகள் மக்களுக்காக போராடி வலுவான அரசியல் சக்தியாக உருமாற்றம் அடைந்திருக்கிறோம். ஆனாலும்கூட இன்றும் விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை பொது இடங்களில் ஏற்ற முடியவில்லை. விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சியின் பெயரையே மாற்றச் சொல்லி காவல்துறையினர் என்னை தனி அறைகளில் வைத்து மிரட்டி இருக்கிறார்கள் அப்போதும் நான் அதில் சமரசம் செய்து கொள்ளவில்லை" என்றார்.

மேலும் பேசிய அவர், "இப்போது கூட சேலம் மாவட்டத்தில் விசிக கொடியை ஏற்றிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளையும் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேசியும் என்னால் முடியவில்லை" என புலம்பும் தோனியில் பேசினார்.


SOURCE - ASIANET NEWS

Similar News