உத்ரகாண்ட் மாநிலத்திற்கு 17,500 கோடி ரூபாய் திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் மோடி!

Update: 2021-12-31 10:00 GMT

பத்து ஆண்டுகளில் உத்ரகாண்ட் மாநிலத்தை வலுவாக்க 17,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.



உத்ரகாண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அம்மாநிலத்தில் நைனிதல் மாவட்டத்தில் ஹல்ட்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17 ஆயிரத்து 500 கோடி அளவில் உத்ரகாண்ட் மாநிலத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்தார்.



துவங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய பாரத பிரதமர் மோடி கூறியதாவது, "அடுத்த பத்து ஆண்டுகள் உத்ரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சியே எங்கள் குறிக்கோளாக உள்ளது. இதனை பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மூலம் செயல்படுத்த உள்ளோம், இந்த 10 ஆண்டுகளை உத்ரகாண்ட் மாநிலத்திற்கான 10 ஆண்டுகளாக மாற்றும் சக்தி இம்மாநில மக்களிடத்தில் உள்ளது" என தெரிவித்தார்.


Source - Maalai malar

Similar News