உக்ரைனில் 18 நாடுகளை சேர்ந்தவர்களை இந்தியாவின் முயற்சியால் மீட்டோம் - பெருமை பொங்க கூறிய மோடி

Update: 2022-03-16 07:00 GMT

"ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இந்தியா மட்டுமின்றி 18 நாட்டு மக்களை மீட்டுள்ளோம்" என பிரதமர் மோடி பெருமை பொங்க கூறியுள்ளார்.


டெல்லியில் "ஆப்ரேஷன் கங்கா" திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தூதரக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாடினார். அப்பொழுது அவர் பேசியதாவது, "உக்ரைனில் இருந்து 18 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியா வெளியேற்றியது, உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் 90 டன் உதவி பொருள்களையும் இந்திய அனுப்பியுள்ளது" என்றார்.


உக்ரேனில் சிக்கித் தவித்த இந்தியர்கள் தாயகம் அழைத்துவர அயராது உழைத்து அதிகாரிகள் தன்னார்வ குழுக்கள் நிறுவனங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன், இதுவரை உக்ரேனில் இருந்து சுமார் 23,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் இதுபோன்ற சூழலில் மீட்பு நடவடிக்கை என்பது சவாலானது" என்றார்


மேலும் அவர் பேசுகையில், "இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போர் நடந்து கொண்டிருந்த பொழுதே உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளின் தலைவர்களுடன் நான் தொடர்ந்து பேசினேன், அவர்கள் ஆதரவுக்கு நன்றி" என அவர் தெரிவித்தார்.



SOURCE - ONE INDIA

Similar News