டெல்லி சட்டமன்ற தேர்தலில் சொல்லி அடித்த பாஜக:வருகின்ற 18இல் பதவி ஏற்க உள்ள பாஜக அரசு!

Update: 2025-02-16 16:31 GMT

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது பாஜக அதிலும் முதல்வர் பதவிக்கான வேட்பாளரை பாஜக அறிவிக்காமலே தேர்தலை சந்தித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியையும் பாஜக கைப்பற்றியுள்ளது 

அதனால் டெல்லியில் முதல்வராக யார் அமர்வார் என்பது குறித்த ஆலோசனை தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் அவர் திரும்பியவுடன் வருகின்ற 16 அல்லது 17 ஆம் தேதி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு அந்தக் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

டெல்லியின் முன்னாள் முதல்வரான சாஹிப் சிங் வர்மாவின் மகனும் அரவிந்த் கெஜ்ரவாலை தோற்கடித்தவருமான பர்வேஸ் வர்மா மற்றும் முன்னாள் மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் முதல்வர் போட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Tags:    

Similar News