இந்தியா உலகின் 2வது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளர்:மேக் இன் இந்தியா திட்டத்தை விமர்சனத்திற்கு ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி!
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முயற்சியை விமர்சித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக சாடியது
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்து வருவதாகவும்,சீன இறக்குமதியில் அதிகரிப்பு இருப்பதாகவும் கூறப்படுவது நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளாகும் என்று குறிப்பிட்டார் மேலும் 2014 முதல் உற்பத்தி நமது பொருளாதாரத்தில் 14% ஆகக் குறைந்துள்ளது என கூறியிருந்தார்
இதற்கு பாஜக ஐடி செல் தலைவர் அமித் மாளவியா ராகுல் காந்தியின் கதைகள் காலாவதியானவை தவறான தகவல்கள் மற்றும் யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்டவை ராகுல் காந்தியால் முத்திரை குத்தப்பட்ட தோல்வியடைந்த பி.எல்.ஐ திட்டம் ரூ.10,905 கோடி ஒட்டுமொத்த முதலீடுகள் ரூ.7.15 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்த உற்பத்தி ரூ.3.9 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு வழிவகுத்தது
இந்தியாவில் மின்னணு உற்பத்தியின் மொத்த மதிப்பு 2013–14ல் ரூ.18,900 கோடியிலிருந்து 2023–24ல் ரூ.4.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது 2014-15 ஆம் ஆண்டில் ரூ.1,566 கோடியாக இருந்த மொபைல் போன் ஏற்றுமதி 77 மடங்கு அதிகரித்து ரூ.1.2 லட்சம் கோடியாக 2023-24 இல் உயர்ந்துள்ளது அதோடு இந்தியாவில் விற்கப்படும் மொபைல் போன்களில் 99.2 சதவீதம் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்றும் 2014-15ல் வெறும் 26 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார் PLI திட்டம் மின்னணு துறையில் 1,39,670 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் அடைந்த உச்சத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்