"ஏன் பெண்களின் திருமண வயதை 21'ஆக உயர்த்தினோம்?" - பிரதமர் மோடி கூறிய நெகிழ்ச்சியான விளக்கம்

Update: 2022-01-14 00:45 GMT

பெண்களும் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தை உயர்த்திக் கொள்ளவே திருமண வயது 21'ஆக உயர்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



மிக சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவாக பெண்களின் திருமண வயதை 21'ஆக உயர்த்தி உத்தரவிட்டது. இதனை அனைத்து சமுதாய பெண்களும் பெருமளவில் வரவேற்றனர். அரசியல் லாபத்திற்காக பல எதிர்கட்சிகள் இதனை எதிர்த்தாலும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு பெண்கள் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்பளித்ததுடன், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிலையில் பெண்களின் திருமண வயதை 21'ஆக உயர்த்தியதற்கு பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். நேற்று தமிழகத்தில் 11 மருத்து கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியில் திறந்தவெளி காமராஜர் மணிமண்டபத்தையும் திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, "நடப்பாண்டு விவேகானந்தர் பிறந்தநாள் மிகுந்த ஊக்கமளிக்கிறது. ஸ்ரீ அரவிந்தரின் 150 வது ஆண்டும், பாரதியாரின் 100'வது ஆண்டு கொண்டாட்டமும் இந்த ஆண்டில் கொண்டாடப்படுவதால் இது முக்கியத்துவம் பெறுவதாக" பெருமை பொங்க தெரிவித்தார்.

மேலும் பேசிய பிரதமர் கூறுகையில், "மகன்களும், மகள்களும் சமம் என மத்திய கருதுவதால் மகள்களின் திருமண வயதை 21' ஆக உயர்த்தியுள்ளோம். இதன் மூலம் மகள்களும் தங்கள் வாழ்வை உயர்த்திகொள்ள கால அவகாசம் கிடைக்கும், அவர்களும் தங்கள் வாழ்வை உருவாக்கி கொள்ள அதிக நேரம் செலவிட முடியும், இந்த நேரம் அவர்கள் வாழ்வில் முக்கியத்துவம் தரும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இளைஞர்களின் குறிப்பாக பெண்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் முடிவுடன் மத்திய அரசு இருப்பது பிரதமரின் இந்த செயல் மூலம் தெளிவாக தெரிகிறது.


Source - Junior Vikatan

Similar News