இந்தியாவிற்கு எதிரான கருத்து - 35 யூ ட்யூப் சேனல்கள் முடக்கம், அடுத்து தமிழகமா?

Update: 2022-01-22 09:45 GMT

இந்தியாவிற்கு எதிராக போலி செய்தி பரப்பிய 35 யூ ட்யூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.


இந்தியாவிற்கு எதிரான பொய்யாக கருத்துக்களை பரப்பும், நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூ ட்யூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த முறை மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்கும் வேளையிக் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு எதிராக போலி செய்தி பரப்பிய 35 யூ ட்யூப் சேனல்களை மத்திய அரசு நேற்று முடக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக இணை செயலாளர் விக்ரம் சஹாய் கூறுகையில், "35 யூ ட்யூப் சேனல்கள், 2 ட்விட்டர் கணக்குகள், 2 இண்ஸ்டாகிராம் கணக்குகள், ஒரு முகநூல் பக்கத்தை முடக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்ததால் முடக்கப்பட்டு வந்ததாக' தெரிவித்தார்.


Source - Maalai malar

Similar News