உதயநிதி தொகுதிக்கு 4 கோடி ரூபாய் செலவில் மின்தடை ஏற்படாமல் இருக்க உபகரணம் - செந்தில்பாலாஜி வைத்த பெரிய ஐஸ்!

Update: 2022-01-10 13:45 GMT

தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதியின் தொகுதியில் மின்தடை ஏற்படாமல் இருக்க 4 கோடி செலவு செய்து RMU எந்திரம் பொருத்தி அதனை துவக்கி வைத்துள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

தி.மு.க ஆட்சியில் எந்த தொகுதி மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கிறதோ இல்லையோ தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு அனைத்து வித திட்ட உதவிகளும் கிடைத்துவிடும். தடுப்பூசிகள் அங்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும், தமிழகத்தில் சேப்பாக்கம் தொகுதியில் வாழும் மக்கள் மட்டுமே தி.மு.க'வின் அமைச்சர்களுக்கு கண்களுக்கு தெரிவார்கள். உதயநிதியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என அந்ந தொகுதிக்கு மட்டும் ஓடாய் உழைப்பார்கள்.

அந்த வகையில் தி.மு.க'வின் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒருபடி முன்னே சென்று உதயநிதிக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு மின்தடையே இருக்க கூடாது என முடிவு செய்து மின்சாரத்துறை சார்பில் 4 கோடி செலவு செய்துள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மின்தடையே ஏற்பட கூடாது என 4 கோடி மதிப்பிலான RMU எந்திரங்களை செயல்பட வைத்து துவங்கியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் எம்.எல்.ஏ உதயநிதி அருகில் இருந்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்க உதயநிதி தொகுதிக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் செய்வது உதயநிதி தொகுதி மக்களுக்காக இல்லை பட்டத்து இளவரசர் உதயநிதியை குளிரவைக்க.


Source - Senthil balaji tweet

Similar News