சுற்றுலாப் பயணிகளை கவர 5 லட்சம் இலவச விசா வழங்க இருக்கும் இந்தியா - மத்திய அரசு அதிரடி

Update: 2022-03-28 09:45 GMT

ஐந்து லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது..


கொரோனோ தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை கடந்த 2020'ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. உள்நாட்டு விமான சேவை மற்றும் நடைபெற்றது சர்வதேச விமான சேவைகள் இயக்கப்படாமலும் இருந்தது.


இந்த நிலையில் கொரோனா தோற்று குறைந்து வருவதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சர்வதேச விமான சேவை தொடங்கியது, இந்த வாரம் முழுக்க இந்தியாவில் சுமார் 3250 விமான சேவைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ளது, இதற்கிடையே சர்வதேச விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, "5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விசா இலவசமாக வழங்கப்படும், சுற்றுலாத்துறையை மீட்பு பாதையில் கொண்டு வரும் நோக்கில் விமான செயல்பாடுகள் மற்றும் விசா சலுகைகள் மீண்டும் தொடங்குவது குறித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது" என்றார்.


'170 நாடுகளில் இவர் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இந்திய தூரங்களுக்கு விசாவுக்காக சொல்லவேண்டியதிலலை இது நிரந்தரமான ஏற்பாடாக என்பது குறித்து நிலைமைக்கேற்ப பரிசீலனை செய்யப்படும்" என்றார் அவர்.


Source - Maalai malar

Similar News