சிறுமி இறப்பிற்கு நியாயம் கேட்டு போராடிய அண்ணாமலை உள்ளிட்ட 500 பா.ஜ.க'வினர் மீது தி.மு.க அரசு வழக்கு

Update: 2022-01-27 11:45 GMT

மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவியின் இறப்பிற்கு நியாயம் கேட்டு அண்ணாமலை தலைமையல் போராடிய பா.ஜ.க'வினர் மீது தி.மு.க அரசு வழக்கு பதிந்துள்ளது.


தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்த 17 வயத மாணவிக்கு மதம் மாற சொல்லி கொடுமை படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டார். இதனை வீடியோவில் மரண வாக்கு மூலமாகவும் பதிந்துள்ளார். இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் அமைதிகாத்த நிலையில் அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க தற்கொலை செய்துகொண்டு இறந்த சிறுமிக்கு நியாயம் கேட்டு கடந்த ஒரு வாரமாக போராடி வருகிறது. நேற்று சென்ன வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க'வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.


இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 500 பா.ஜ.க'வினர் மீது கொரோனா'வை காரணம் காட்டி 4 பிரிவுகளின் கீழ் தி.மு.க அரசு வழக்கு பதிந்துள்ளது.


Source - Maalai malar

Similar News