டாஸ்மாக்'கில் ஃபுல் ஸ்டாக் - 675 கோடி சேல்ஸ் - சாதனையில் தி.மு.க அரசு

Update: 2022-01-15 12:15 GMT

இரண்டு நாட்கள் டாஸ்மாக் மதுபானக்கடை விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் 675.19 கோடிகளுக்கு தி.மு.க அரசு மது விற்பனை செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது.



தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு கோவில்களில் கட்டுப்பாடு, பள்ளிகளில் கட்டுப்பாடு, கல்லூரிகளில் கட்டுப்பாடு, வணிக வளாகங்களில் கட்டுப்பாடு, விளையாட்டு மைதானங்களில் கட்டுப்பாடு, திரையரங்குகளில் கட்டுப்பாடு என அனைத்து மக்கள் புழங்கும் இடங்களில் கொரோனா'வை பரவாமல் தடுக்க கட்டுப்பாடு விதித்தது. ஆனால் குடிக்க கூட்டம் கூடும் இடமான டாஸ்மாக் மதுபான கடைகளில் மட்டும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல் பொங்கல் பண்டிகைக்கு பெருமளவில் மது விற்பனை செய்ய ஃபுல் ஸ்டாக் இறக்கியது.

தி.மு.க இறக்கிய ஃபுல் ஸ்டாக் மதுவகைகள் வீண் போகவில்லை இந்த பொங்கல் பண்டிகைக்கு கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முழு அளவு மதுபான பாட்டில்களை ஸ்டாக் வைத்தது தி.மு.க அரசு. இந்நிலையில் இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் மதுப்பிரியர்கள் அதிக அளவில் மதுபாட்டில்களை கார்களிலும், பைக்'களிலும் வாங்கி நிரப்பி சென்றனர்.

அந்த அளவில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான படைகளில் விற்பனை களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ற கடைகளில் சரியான அளவு ஸ்டாக்களை நிரப்பியதன் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 675.19 கோடி ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையை செய்து தி.மு.க அரசு சாதனை படைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 68.76 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளது.


Source - Maalai malar

Similar News