பல நாட்டின் தலைவர்களை பின்னுக்கு தள்ளி 71 சதவிகித வாக்குகளுடன் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி

Update: 2022-01-21 11:15 GMT

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முன்னிலை வகித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.


உலகின் மிக பிரபலமான தலைவர்கள் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நம் பாரத நாட்டின் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.


தி மார்னிங் கன்சல்ட் தகவலின் படி பிரதமர் மோடிக்கு 71 சதவிகித வாக்குகள் கிடைத்து முதலிடத்திலும், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 66 சதவிகித பேர் ஆதரவுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதில் 43 சதவிகித ஆதரவு பெற்று 6 வது இடத்திலும் உள்ளார்.


உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடனை பின்னுக்கு தள்ளி முதலிடம் வகிக்கும் பாரத பிரதமர் மோடிக்கு உலக அரங்கில் எவ்விதம் மதிப்பு இருக்கிறது என இதன்மூலம் தெளிவாகிறது.


Source - Maalai malar

Similar News