நீட் தேர்வு பற்றி ஆராய 9 பேர் கொண்ட குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின் - கண்துடைப்பு நாடகமா?

Update: 2021-06-10 15:15 GMT

நீட் பற்றி ஆராய 9 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தற்பொழுது குழு அமைத்திருப்பது கண்துடைப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க கையிலெடுத்த முக்கிய விஷயங்களில் ஒன்று நீட் தேர்வு, இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் எனவும் தனது பிரச்சாரத்தில் தி.மு.க கூறி வந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்து ஒருமாத காலம் ஆகியும் இதுபற்றி ஏதும் கூறாத நிலையில் தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு பற்றி ஆராய 9 பேர் கொண்ட ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அலுவலர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவ கல்வி இயக்ககக் கூடுதல் இயக்குநர், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தி.மு.க நீட் தேர்வை ரத்து செய்யுமா அல்லது வேறுமாதிரியான முடிவை எடுக்குமா என இந்த குழு அறிக்கை அளித்த பிறகே முடிவு செய்யப்படும்.

Similar News